நெருப்பக் கூட தொடலாம்! ஆனா கருப்ப தொடக் கூடாது! மிரட்டலாக வெளியானது ‘காஞ்சனா 3’ டிரைலர்

 

நெருப்பக் கூட தொடலாம்! ஆனா கருப்ப தொடக் கூடாது! மிரட்டலாக வெளியானது ‘காஞ்சனா 3’ டிரைலர்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3 படத்தின் டிரைலர் வெளியானது.

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3 படத்தின் டிரைலர் வெளியானது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

kanchana

அதையொட்டி அந்த வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். இப்படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

kanachana

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ‘நெருப்பைக் கூட தொடலாம், கருப்ப தொட்டுடக் கூடாது. நீ மாஸ்னா நான் டபுள் மாஸ்’ஆகிய பஞ்ச் வசனங்களும், திகிலூட்டும் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. காஞ்சனாவின் முந்தையா 2 பாகங்கள் போலவே இப்படமும் ரசிகர்களின்  எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.  

மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட வாய்ப்புகாக படுக்கைக்கு அழைத்தார்: தெலுங்கு பட நடிகை பரபரப்பு பேட்டி!