நெருங்கும் தேர்தல்: திமுகவை பாராட்டிய கமல் ஹாசன்: காரணம் இதுதான்!

 

நெருங்கும் தேர்தல்: திமுகவை பாராட்டிய கமல் ஹாசன்: காரணம்  இதுதான்!

மக்களவை தேர்தலில் போட்டியிடாதது குறித்து பதிலளித்துள்ள கமல் ஹாசன், ‘பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்கு தோள் கொடுக்க விரும்புகின்றேன்’ என்று கூறியுள்ளார். 

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடாதது குறித்து பதிலளித்துள்ள கமல் ஹாசன், ‘பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்கு தோள் கொடுக்க விரும்புகின்றேன்’ என்று கூறியுள்ளார். 

நெருங்கும் தேர்தல்:

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

கமல் போட்டியில்லை!

kamal

முதன்முறையாக களம்  காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ம் தேதியும், இரண்டாம் கட்ட  வேட்பாளர் பட்டியலை  கோவை கொடீசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டத்திலும் கமல் ஹாசன்  வெளியிட்டார். இந்த பட்டியலில் கமலின்  பெயர் இடம்பெறவில்லை. இது  அக்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  சந்தித்த அவர், ‘வேட்பாளராக நிற்பதற்குத் தயக்கமில்லை, எனக்கு வேலை இருக்கிறது. இந்த பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்குத் தோள் கொடுக்க விரும்புகின்றேன். அதுதான் என் வேலை. இன்று இந்த முகங்கள் தெரியாமல் இருக்கலாம். நாளை இந்த முகங்களை மக்களுக்குத் தெரியவைப்பது என்னுடைய கடமை. என்னை ஒரு உபேர் டாக்ஸி போன்று கருதுகிறேன். அதில் வேட்பாளர்கள் பயணிக்கட்டும்.

என்னுடைய ஆசை இது தான்!

kamal

இதன்மூலம் இன்னும் அதிக மக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால், தொகுதி நலன் கருதி, சுயநலன் கருதி அந்த இடத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் நான் இருமுறையாவது செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த விமர்சனம் பின்னர் பாராட்டாக மாறும்’ என்றார். 

திமுகவுக்குப் பாராட்டுகள்

kamal

இதை தொடர்ந்து  ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து பேசியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், பெண்களை மரியாதையாக நடத்த வேண்டியது நமது கடமை. ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படி பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு திமுகவுக்குப் பாராட்டுகள்’என்று பதிலளித்தார். 

 

இதையும் வாசிக்க: நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு – ராதாரவியை சஸ்பெண்ட் செய்தது திமுக