நெருங்கும் தீபாவளி: அரசு பேருந்துகளில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்!

 

நெருங்கும் தீபாவளி: அரசு பேருந்துகளில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் நாளை முன்பதிவு தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் நாளை முன்பதிவு தொடங்குகிறது.

தீபாவளிப் பண்டிகை  வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் வெளியூர்களில் வேலைபார்ப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் என பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்து கூட்ட நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சவுகரியமான பயணத்தை மேற்கொள்ள அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் ஏற்கனவே  தீபாவளி பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவானது நாளை முதல் தொடங்கவுள்ளது. www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தீபாவளி பண்டிகையின் போது  அரசு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அதை குறைக்கவும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கும் என்று போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.