நெருங்கும் இறுதி போட்டி: 5 ஹவுஸ்ட்மேட்ஸை குறிவைத்து மதுமிதா வெளியிட்ட சர்ச்சை வீடியோ பதிவு!

 

நெருங்கும் இறுதி போட்டி:  5 ஹவுஸ்ட்மேட்ஸை குறிவைத்து மதுமிதா வெளியிட்ட   சர்ச்சை வீடியோ பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுமிதா ஒரு வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுமிதா ஒரு வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

madhu

பிக் பாஸ்  நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரை நான்கு  பேர்கள் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். இன்று பிக் பாஸ்  டைட்டிலை வெல்ல போவது யார் என்பதைத்  தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கிறார்கள். 

 

இருப்பினும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் மதுமிதா சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்டாரி பதிவிட்டுள்ளார். அதில், ‘8பேர் எப்படி  ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம். இது trailer மட்டுமே . Main picture காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில், ஒருவரை குறி வைத்து திட்டாதீர்கள் திட்டுகளை பகிருங்கள். முக்கியமானவர்களை விட்டுவிட்டீர்கள் vsksa மன்னிக்கவும் திட்டாதீர்கள் கண்டியுங்கள் கண்டனத்திற்கு மிக தகுதியானவர்கள் இவர்கள் vsksa என்று கூறியுள்ளார். அதில்  vsksa என்பது வனிதா, ஷெரின் ,கவின் ,சாண்டி , அபிராமி என்று சொல்லிருப்பதுடன் லாஸ்லியா பெயரையும் அடுத்த அப்பதிவில் இணைத்துள்ளார்.

 

இவ்வாறு தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த பதிவுகள் பதிவிடும் மதுமிதா, ‘திரைப்படத்தில் நடிப்பவர்கள் சமூக அக்கறையோடு இருக்கக் கூடாதா? தீவிரவாதிகளாக நடிப்பவர்கள் தீவிரவாதிகளா?நல்லவர்களாக நடிப்பவர்கள் நல்லவர்களா? சினிமாவும் டிவியும் ஒன்றா? என்றும் Medal வேண்டாம் உங்கள் இதயங்கள் மட்டும் போதும்’ என்றும் சாடி வருகிறார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருபுறம் மதுமிதாவின் விமர்சனங்கள் மறுபுறம் என இணையதளத்தில் பிக் பாஸ் போர் ஒன்றே மூண்டுள்ளது என்று சொல்லலாம்.