நெருங்குகிறது மேலவைத் தேர்தல்…  நெருக்கடியில் எடப்பாடி!

நெருங்குகிறது மேலவைத் தேர்தல்…  நெருக்கடியில் எடப்பாடி!

அதிமுகவில் தம்பி துரையில் இருந்து கோகுல இந்திராவரை ஒரு கூட்டமே எடப்பாடியை நெருக்குகிறது. மூன்றும்,அதிமுகவுக்கே என்றால் எடப்பாடி சமாளித்துவிடக் கூடும், ஆனால் நிலவரம் அப்படி இல்லை. கேப்டன் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று ஏதோ ஞாபகத்தில் உருமி விட்ட பிரேமலதா சுதாரித்து ‘ கூட்டணி தர்மத்தை மதித்து அதிமுக எங்களுக்கு ஒரு இடம் கொடுக்கும் என்று துண்டு போட்டு இருக்கிறார்.

மார்ச் 10-ம் தேதி மேலவைத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.இந்த முறை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தலா 3 எம்பிக்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

premalatha-vijayakanth-02

அதிமுகவில் தம்பி துரையில் இருந்து கோகுல இந்திராவரை ஒரு கூட்டமே எடப்பாடியை நெருக்குகிறது. மூன்றும்,அதிமுகவுக்கே என்றால் எடப்பாடி சமாளித்துவிடக் கூடும், ஆனால் நிலவரம் அப்படி இல்லை. கேப்டன் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று ஏதோ ஞாபகத்தில் உருமி விட்ட பிரேமலதா சுதாரித்து ‘ கூட்டணி தர்மத்தை மதித்து அதிமுக எங்களுக்கு ஒரு இடம் கொடுக்கும் என்று துண்டு போட்டு இருக்கிறார்.

tn-bjp

எடப்பாடியோ அதிமுகவில் பல மூத்த தலைவர்களுக்கு பதவி தரவேண்டி இருக்கிறது. விவாதித்து முடிவெடுப்போம் என்கிறார். இதற்கிடையே டெல்லி பிஜேபி இன்னொரு தூண்டிலை வீசத் தயாராகிறது. மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தின் போது தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் தர விரும்புவதாகவும் ஆசை காட்டி இருக்கிறது பிஜேபி.ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஏழெட்டு மினிஸ்டர்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டி எங்களுக்கு ஒரு மேலவை எம்.பி இடம் கொடுத்தால் உங்களுக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவி தருவோம் என்று சொன்னதுமே ஓ.பி.எஸ்க்கு ஒத்த  மகனை மந்திரி ஆக்கிப் பார்க்கும் ஆசையில் இருக்கும் அவர் மூலம்தான் இந்த வலையே வீசப்பட்டதாம்.

opr

அப்படி தேமுதிக,பிஜேபி இருவருக்கும் ஆளுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டால் மீதி இருக்கும் ஒரு இடத்தில் வைத்தியலிங்கத்தை நிறுத்தலாம் என்று இப்போதைக்கு கணக்குப் போட்டாலும்,இப்போது எம்.பியாக இருக்கும் விஜிலா சத்யானந்த், முத்துகருப்பன் ஆகியோரும் பதவி கேட்கிறார்ளாம்.கிருஷ்ணசாமி விலகிவிட்டதைச் சுட்டிக்காட்டி 6 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் எங்கள் இணத்திற்கு ஒரு எம்.பி பதவி வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளார்கள் கேட்கிறார்கள்.அதை முன்னாள் எம்.எல்.ஏ சங்கரன் கோவில் முத்துலட்சுமி, தூத்துக்குடி சின்னதுரை இருவரில் ஒருவருக்கு தரும்படி கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

muthulakshmi

ஆனால் சின்னதுரைக்கு தருவதை அந்த மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு விரும்பவில்லை.ஆனால் முத்துலட்சுமி எம்.பி ஆவதை அந்தத் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் ராஜலட்சுமி ஆதரிக்கிறாராம்.ஆனவே,இதில் எந்த முடிவை எடுப்பது என்பதில் எடப்பாடி விழி பிதுங்கி நிற்கிறார். அவரால் அமித்ஷாவுக்கு நோ சொல்ல முடியாது,அதனால் பாதிக்கப்பட போவது தேமுதிக-வின்  எம்.பி கனவுதான் என்று தெரிகிறது. அடுத்த இரண்டுவாரத்தில் எடப்பாடி எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அது சர்ச்சைக்கு இடமானதாகவே இருக்கும் என்பது மட்டும் உறுதி!.