நெருங்கி பழகி விட்டு பாலியல் வன்கொடுமை என்று புகார் தெரிவித்தால் அது செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

நெருங்கி பழகி விட்டு பாலியல் வன்கொடுமை என்று புகார் தெரிவித்தால் அது  செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கடந்த  ஆறு ஆண்டுகளாக உடல் உறவில் ஈடுபட்டதாகவும் ஆனால்  தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

நெருங்கி பழகி விட்டு பாலியல் வன்கொடுமை என்று புகார் தெரிவித்தால் அது  செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: பெண் ஒருவர் விருப்பப்பட்டு  தொடர்ந்து ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருப்பது பாலியல் பலாத்காரம் வழக்கில் சேராது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சமீபகாலமாக திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றிவிட்டதாக பல பெண்கள் போலீசில் புகார் கொடுக்கின்றனர். சிலரோ நீதிமன்றம் வரை சென்று தங்களுக்கான நியாயத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் துணை ராணுவ வீரர் ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்று அளித்தார். அதில், திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த  ஆறு ஆண்டுகளாக உடல் உறவில் ஈடுபட்டதாகவும் ஆனால்  தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

sc

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், துணை ராணுவ வீரருடன் அந்த பெண்ணும் விருப்பப்பட்டு ஆறு ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக அவனுடன் பழகி பின்னர், வாக்குறுதியை மீறிவிட்டதாக வழக்குத் தொடர்வதை ஏற்க முடியாது. திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்த நபர் மீது உடனடியாக புகார் அளிக்க வேண்டும். பொய் வாக்குறுதிக்கும் வாக்குறுதி மீறலுக்கும் வித்தியாசம் இருக்கிறது’ என்று கூறி மனுவை நிராகரித்தது.