நெருக்கடி நிலையில் ஊடக நிறுவனங்கள்… மத்திய அரசை வலியுறுத்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கை

நெருக்கடி நிலையில் ஊடக நிறுவனங்கள்… மத்திய அரசை வலியுறுத்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக செய்தித்தாள் ஊடகங்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இதை எதிர்கொள்ள உதவிகள் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அச்சு ஊடக நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அச்சு ஊடகங்களின் நிர்வாகிகள் இந்து என்.ராம் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், “கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய செய்தித்தாள் நிறுவனங்கள் ரூ.5000 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். எனவே, செய்தித்தாள் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று இந்திய செய்தித்ததாள்களின் அமைப்பான ஐ.என்.எஸ் சார்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

hindu-n-ram

ஆனால், அந்த கோரிக்கை தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்தது போல் இல்லை. இதனால், தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த குழுவினர் இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களையும் குழுவினர் சந்தித்துள்ளனர். தி.மு.க தலைவர் உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.