நெய் சோறு… கெத்தேல் சிக்கன்… திருவனந்தபுரத்தில் கலக்கும் பாரம்பரிய உணவகம்..

நெய் சோறு… கெத்தேல் சிக்கன்… திருவனந்தபுரத்தில் கலக்கும் பாரம்பரிய உணவகம்..

திருவநந்தபுரம் போயிருக்கிறீர்களா? தமிழக எல்லையோரம் இருப்பதால் மொழியிலும் உணவில தமிழ் செல்வாக்குச் செலுத்தும் நகரம்.

மலையாளிகளின் வழக்கமான உணவுகளோடு , எல்லாவகை தமிழக உணவுகளும் கிடைக்கும்,கொத்து புரோட்டா உட்பட.
ஆனால்,எல்லா நகரங்களையும் போலவே திருவனந்தபுரத்திலும் வேறெங்கும் கிடைக்காத தனித்த உணவுகளைத் தரும் உணவகங்களை கொண்டிருக்கிறது.

food

கைதமுக்கில் இருக்கும் பாலன் தட்டுகடா,திருவனந்தபுரத்தில் பிரியாணியை அறிமுகம் செய்த ஆஸாத்,நகரின் முதல் உணவகமான நிகுஞ்சம்,போல மிகப்பழமையான உணவகம்,சாலை மார்கெட்டில் இருக்கு ஹோட்டல் ரஹ்மானியா!

பத்மநாபசாமி கோவிலுக்கு எதிரில் போகும் சாலையில் இருக்கிறது ‘சால’ என்று அழைக்கப்படும் திருவனந்தபுரத்தின் பழமையான தினசரி சந்தை.
அதற்குள் நுழைந்து யாரிடம் கேட்டாலும் ஹோட்டல் ரஹ்மானியாவுக்கு வழிகாட்டுவார்கள்.

இப்போது புதுப்பித்து இருக்கிறார்கள்.ஆனாலும்,சிறிய உணவகம்தான்.இந்த உணவகத்தின் புகழுக்கு காரணம் இங்கே கிடைக்கும் ‘ கெத்தேல்’ சிக்கன்.
அதிகம் சாய்ஸ்கள் இல்லாத உணவகம் இது.இரண்டே வெரைட்டிதான், நெய்ச்சோறு,அல்லது சப்பாத்தி.கூடவே கோழியின் கழுத்து மற்றும் உதிரி பாகங்களைக் ஜொண்டு செய்யப்பட்ட ஒரு ஆலிவ் கிரீன் நிறக் குழம்பு.
அப்புறம் கெத்தேல் சிக்கன்,மீண்டும் கெத்தேல் சிக்கன் , மீண்டும் மீண்டும் கெத்தேல் சிக்கன்.

ஆமாம்,சப்பாத்திகள் இலவசம்,சிக்கனுக்கு மட்டுமே காசு.நீங்கள் போதும் என்று சொல்லும் வரை,நம்ம ஊர் உப்புக்கறி போல காய்ந்த மிளகாய் , உப்பு மட்டும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொறித்த ‘ கெத்தேல் ‘ சிக்கனை வைத்துக்கொண்டே இருப்பார்கள்.

kethel chicken

கூடவே இன்னொரு சிறப்பும் உண்டு,தண்ணீருக்குப் பதில் இங்கே லைம் ஜூஸ் தருகிறார்கள்,அதுவும் அன்லிமிட்டட்தான்.நீங்கள் குடிக்கக் குடிக்க ஊற்றிக்கொண்டே இருப்பார்கள்.நீங்கள் எவளவு சிக்கன் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஒவ்வொரு முறையும் 200 கிராம் அளவு சூடான பொறித்த சிக்கன் வைக்கிறார்கள்.

ஒரு முறை மட்டும் சிக்கன் வாங்கிக்கொண்டு அவர்கள் தரும் உள்ளங்கை அளவு சிக்கன் நூறு தின்றாலும்,முகம் சுளிக்காமல் குழம்பும் லைம் ஜூசும் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

ட்டணமாக 75 ரூபாய் வசூலிக்கிறார்கள்.இரண்டு முறையாவது வாங்காமல் இருக்க முடியாது.ஆவரேஜாக மூன்று முறை சிக்கன் வாங்கினால் 225 ரூபாய் பில் வரும்.

அடுத்த முறை அனந்தபுரி போகும்போது அவசியம் ரஹ்மானியாவுக்கு ஒரு விசிட் அடியுங்கள்.வெஜ்ஜிடேரியன் நண்பர்களை அழைத்துப் போகாதீர்கள்,அவர்களுக்கு எலுமிச்சை சாற்றைத் தவிர எதுமே கிடைக்காது.