நெய்வேலி விபத்தால் 210 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை! – மின்சார தட்டுப்பாடு ஏற்படுமா?

நெய்வேலி விபத்தால் 210 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை! – மின்சார தட்டுப்பாடு ஏற்படுமா?

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் விபத்து காரணமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 210 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

neiveli-power-plant

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் 3940 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல்மின்நிலைய பாய்லர் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக மூன்று பாய்லர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 1470 மெகாவாட் மின்சாரம் இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாகவும், விபத்து காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

minister-thangamnai-67

இது குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, நெய்வேலி விபத்து காரணமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 210 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் மின்சாரத் தேவை குறைவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது” என்றார்.