நெதர்லாந்தில் ஒரு நாய், மூன்று பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

 

நெதர்லாந்தில் ஒரு நாய், மூன்று பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நெதர்லாந்தில் ஒரு நாய், மூன்று பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக டச்சு அதிகாரிகள் கூறினர்.

நெதர்லாந்தில் ஒரு நாய், மூன்று பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக டச்சு அதிகாரிகள் கூறினர். ஆனால் செல்லப் பிராணிகள் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று அதிகாரிகள் கூறினர்.

ஏப்ரல் மாதம் இறுதியில் எட்டு வயது புல்டாக் நாய் ஒன்றுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல ஒரு பண்ணையில் ஏப்ரல் மாதத்தில் மூன்று பூனைகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

dogs

எந்த நிலையிலும், செல்லப் பிராணிகள் மூலம் கொரோனா தொற்று மக்களைப் பாதிக்காதுஎன அதிகாரிகள் கூறினர். செல்லப் பிராணிகள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புகள் குறைவு என்றாலும், கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் அவற்றுடன் பழகுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை கட்டிப்பிடிப்பது, உங்களை நக்க விடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இரண்டு நாய்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெல்ஜியத்தில் ஒரு பூனை மற்றும் பிராங்க்ஸ் மிருகக் காட்சி சாலையில் ஒரு புலி ஆகியவற்றுக்கும் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டது. நெதர்லாந்தில் கொரோனா வைரஸால் 5,643 பேர் இறந்துள்ளனர். மேலும் 43,681 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.