நெட்டிசன்களின் கோரிக்கையை ஏற்ற ஜொமோட்டோ : மாற்றுத்திறனாளி ஊழியருக்கு செய்த நல்ல காரியம் இதுதான்!?

 

நெட்டிசன்களின்  கோரிக்கையை ஏற்ற ஜொமோட்டோ : மாற்றுத்திறனாளி ஊழியருக்கு செய்த நல்ல காரியம் இதுதான்!?

 ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலைசெய்து வந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அந்த நிறுவனம் எலக்ட்ரிக் சைக்கிளை தந்துள்ளது. 

ராஜஸ்தான் : ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலைசெய்து வந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அந்த நிறுவனம் எலக்ட்ரிக் சைக்கிளை தந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள பீவார் என்ற பகுதியில் இரண்டு கால்களும் செயல்படாத ராமு சாகு என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிகிறார். 40 டிகிரி வெயில் மூன்று சக்கர வாகனத்தில் சென்று உணவுகளை டெலிவரி செய்யும் இவரது வீடியோ சில வாரங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில்  வேகமாகப் பரவியது.

 

மாற்று திறனாளியின் குறைகளைப் பார்க்காமல் அவரின் கடின உழைப்பை மற்றும் கண்டு வேலை கொடுத்துள்ள ஜொமோட்டோ நிறுவனத்திற்குப் பலரும் வாழ்த்துக் கூறினர். மேலும் இது போன்ற கடுமையான உழைப்பாளிக்கு பேட்டரியில் இயங்கும் வாகனத்தைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்நிலையில் வலைதளவாசிகளின் கோரிக்கையை ஏற்று ஜொமோட்டோ  நிறுவனம், ராமு சாகுக்கு எலக்ட்ரிக் சைக்கிள் வழங்கியுள்ளனர். இதனை ஜோமாட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘எங்கள் ஊழியர் ராமு சாகு எலக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுக்கொண்டார். எங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

தற்போது ராமு எலக்ட்ரிக் சைக்கிளை  ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் ராமுவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.