நெட்டிசனின் ஏடாகூட கேள்வி…சாதுரியமாகப் பதிலளித்துத் தப்பித்த விஜே அஞ்சனா

 

நெட்டிசனின் ஏடாகூட கேள்வி…சாதுரியமாகப் பதிலளித்துத் தப்பித்த விஜே அஞ்சனா

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா.

தமிழ் சின்னதிரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா. அதையடுத்து கடந்த  2016 ஆம் ஆண்டு  நடிகர் கயல் சந்திரனை காதலித்து கரம் பிடித்தார்.

 


 

இவர்களுக்கு  சமீபத்தில் ஆண்  குழந்தை ஒன்றும் பிறந்தது. இதனால் சின்னதிரையை விட்டு விலகியிருந்த அஞ்சனா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக மாறினார்.

ttn

 

 சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தனது புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அஞ்சனா சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ’No filter! Just sun kissed!’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தைக் கண்ட விஜே ரம்யா உள்ளிட்ட பலர் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்திருந்தனர்.

ttn

ஆனால்  நெட்டிசன் ஒருவர், சூரியனுக்கு முத்தமா? அப்போ நீங்க திமுகவா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அஞ்சனா, யோவ் என்று பதிலளித்து நாசூக்காகத் தப்பித்துக் கொண்டார்.