நெட்ஃப்ளிக்ஸ் மீது சிவசேனா புகார்!

 

நெட்ஃப்ளிக்ஸ் மீது சிவசேனா புகார்!

சில நிகழ்ச்சிகள் இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாக சிவசேனா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது

மும்பை: இந்து மத உணர்விற்கு எதிராக நெட்ஃப்ளிக்ஸ் தளம் செயல்படுவதாக சிவசேனா கட்சி புகார் கூறியுள்ளது. 

நெட்ஃப்ளிக்ஸ் என்னும் சமூக தளமானது  பல நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. அதற்காக இதற்கு மாத  அல்லது வருட சந்தா செலுத்தி ரசிகர்கள் கண்டு ரசிக்கின்றனர். 

netflix

இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் சில நிகழ்ச்சிகள் இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாக சிவசேனா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த அப்புகாரில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் சில நிகழ்ச்சிகள் இந்து மதத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது. அதன் நோக்கம் சரியாக இல்லை. அதனால் அந்த தளத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்;’ என்று குறிப்பிட்டிருந்தது. 

shivsena

முன்னதாக நெட்ஃப்ளிக்ஸ் குறித்து  டெல்லி பாஜகவின் செய்தி தொடர்பாளர்  புகார் அளித்திருந்தார். அதில் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகளில் சில சீக்கிய மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.