நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

 

நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

பழ.நெடுமாறன் எழுதிய “தமிழ் ஈழம் சிவக்கிறது” புத்தகத்தை உயர் நீதிமன்றம் அழிக்க சொன்னது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை: பழ.நெடுமாறன் எழுதிய “தமிழ் ஈழம் சிவக்கிறது” புத்தகத்தை உயர் நீதிமன்றம் அழிக்க சொன்னது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஈழத்திற்கு ஆதரவாக “தமிழ் ஈழம் சிவக்கிறது” என்ற புத்தகத்தை 1994-ம் ஆண்டு வெளியிட்டார். இதனால் அவர் கடந்த 2002-ம் ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 2006-ம் ஆண்டு பழ.நெடுமாறன் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமனம் ”தமிழ் ஈழம் சிவக்கிறது” புத்தகங்களை உடனடியாக அழிக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் எழுதிய தமிழ் ”ஈழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. மீண்டும் ஒரு நெருக்கடி காலத்திற்கு செல்வது போல் உள்ளது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது போல் உள்ளது என்றார்.