நெடுஞ்சாலை கொள்ளையர்கள் கைது – 6 மாநில போலீசாரின் உதவியோடு!

 

நெடுஞ்சாலை கொள்ளையர்கள் கைது – 6 மாநில போலீசாரின் உதவியோடு!

களவுப்போன 4.8 கோடி மதிப்பிலான போன்களுக்குப் பதிலாக 70 லட்சம் ரொக்கமும், 8 செல்போன்களும் பறிமுதல் செய்யபட்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என ஆந்திர காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஃபிப்ரவரியில் புத்தம்புது சயோமி மொபைல்போன்களை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவில் உள்ள டீலரிடம் சேர்ப்பதற்காக லாரி ஒன்று கிளம்பியது. சென்னை – கொல்கத்தா சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியை வழிமறித்த கும்பல் ஒன்று லாரி ஓட்டுநரை கீழே இறக்கி, அடித்து நொறுக்கி ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, 4.8 கோடி மதிப்பிலான அத்தனை போன்களையும் வேறொரு வண்டியில் ஏற்றிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். குற்றம் குறித்து விசாரித்த ஆந்திர போலீசாருக்கு ஒரு தடயம்கூட கிடைக்கவில்லை. உடனடியாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், மஹாரஷ்ட்ரா, மத்திய பிரதேசம், மற்றும் உத்தர பிரதேச போலீசாரை தொடர்புகொண்டு, நெடுஞ்சாலை கொள்ளைகள் குறித்த தகவல்களை சேகரித்ததில், லட்டு மாதிரி தகவல்கள் கிடைத்தன. அதாவது, மேற்படி கும்பல் ஏற்கெனவே தமிழ்நாடு, ஆந்திர நெடுஞ்சாலைகளில் இந்த கும்பல் கைவரிசையை காட்டியிருப்பதும், ஆனால் கொள்ளை முயற்சிகள் தோல்வியில் முடிந்திருப்பதும், ஒரு லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

Police investigating the case

ஆக, குற்றவாளிகள் யார் என தெரிந்துவிட்டது, ஆனால் எங்கேயும் அடையாளம் இல்லை. எனவே, குற்றம் நடந்த அன்று, 90 நெடுஞ்சாலை சுங்க கட்டண மையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் கவனமாக நோக்கப்பட்டதில், நம்பர் ப்ளேட் இல்லாமல் சென்ற ஒரு கார்மீது மொத்த கவனமும் திரும்பிற்று. புத்தம் புதிய கார் என்பதால், காரில் இருந்த ரிப்பன் கலரை வைத்து எந்த டீலர் என கண்டுபிடித்து விசாரித்ததில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரின் கார் என தெரியவந்தது. முறையாக விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த செல்போன்களை இந்தியாவில் விற்றால் பிரச்னை வரும் என்று, கொல்கத்தா வழியாக பங்களாதேஷுக்கு கடத்தி விற்றுவிட்டனர். களவுப்போன 4.8 கோடி மதிப்பிலான போன்களுக்குப் பதிலாக 70 லட்சம் ரொக்கமும், 8 செல்போன்களும் பறிமுதல் செய்யபட்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என ஆந்திர காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.