நெடுஞ்சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த காட்டு யானை.. அதிர்ச்சியில் டூ வீலருடன் கீழே விழுந்த வாலிபர்கள் !

 

நெடுஞ்சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த காட்டு யானை.. அதிர்ச்சியில் டூ வீலருடன் கீழே விழுந்த வாலிபர்கள் !

குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காட்டு யானை ஒன்று ஒய்யார நடைபோட்டுச் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. 

சமீப காலமாக வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகள் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து  விடுகின்றன. இதனால், வனப்பகுதிகளின் அருகே வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காட்டு யானை ஒன்று ஒய்யார நடைபோட்டுச் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. 

ttn

அச்சமயம் க மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் சென்றுள்ளனர். கம்பீர நடைபோட்டுக் காட்டு யானை எதிரே வருவதைக் கண்ட இளைஞர்கள் அதிர்ச்சியில் தங்களது இரு சக்கர வாகனத்துடன் நெடுஞ்சாலையில் கீழே விழுந்துள்ளனர். இவர்கள், கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரிகள் ஆங்காங்கே நின்றுள்ளது. யானை அந்த இளைஞர்களை ஏதாவது செய்து விடும் என்று வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்த நிலையில், அவர்களை ஏதும் செய்யாமல் யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதனால், அந்த நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.