நெடுஞ்சாலையில் தூர பயணமா? இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா விபத்துகளை தவிர்க்கலாம்?

 

நெடுஞ்சாலையில் தூர பயணமா? இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா விபத்துகளை தவிர்க்கலாம்?

இரவு நேரங்களில் நெடுஞ்சாலை பயணம் என்றாலே மனசு றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடும். அதுவும், நமக்குப் பிரியமானவர்கள் உடனிருக்கும் போது, கூடவே இளையராஜா பாடல்களைக் கேட்டப்படி பிடிச்ச  ஊருக்கு பயணம் என்றால் சொல்லவே வேண்டும். நம்மூர்ல எப்பவுமே தீபாவளியோ, பொங்கலோ ரயில் டிக்கெட்கள் எல்லாம் நொடிப் பொழுதில் தீர்ந்து போகும். அந்தமாதிரியான நேரத்துல பலருக்கும் கைக்கொடுப்பது கார் பயணம் தான். அப்படி நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்ளும் போது இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கவனத்துல வெச்சுக்கிட்டா நம்மளோட பயணம் விபத்தில்லாமல் ஆனந்தமா இருக்கும்.

இரவு நேரங்களில் நெடுஞ்சாலை பயணம் என்றாலே மனசு றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடும். அதுவும், நமக்குப் பிரியமானவர்கள் உடனிருக்கும் போது, கூடவே இளையராஜா பாடல்களைக் கேட்டப்படி பிடிச்ச  ஊருக்கு பயணம் என்றால் சொல்லவே வேண்டும். நம்மூர்ல எப்பவுமே தீபாவளியோ, பொங்கலோ ரயில் டிக்கெட்கள் எல்லாம் நொடிப் பொழுதில் தீர்ந்து போகும். அந்தமாதிரியான நேரத்துல பலருக்கும் கைக்கொடுப்பது கார் பயணம் தான். அப்படி நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்ளும் போது இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கவனத்துல வெச்சுக்கிட்டா நம்மளோட பயணம் விபத்தில்லாமல் ஆனந்தமா இருக்கும்.

travel

பலரும் கார் கலரை பார்த்து வாங்குறாங்க. அப்படி வாங்கும் போது பெரும்பாலும் காரோட கலர் வெள்ளை மாதிரியான லைட் கலரில் வாங்கினால் இரவு நேரத்துல நம்ம கார் பளீச்சுன்னு மற்ற வாகனங்களுக்குத் தெரியும். ஆனா விபத்துக்களை தவிர்க்க காரோட கலர் மட்டுமே போதுமானது கிடையாது. உலகிலேயே சாலை விபத்துக்களால் உயிரிழப்பு எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக நடைபெறுகிறது. இந்திய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களில் இருந்து உயிர் தப்புவதற்கு சில ‘கோல்டன் ரூல்ஸ்’  இருக்கிறது. இவற்றை எல்லாம் கடைப்பிடிச்சா நாம பாதுகாப்பா இருக்கலாம். நெடுஞ்சாலை பயணம் செல்வதற்கு முன் தினமே உங்களுடைய கார் முழுவதும் பரிசோதனை செய்வது மிக அவசியம். பிரேக் கண்டிஷன், டயர்களில் காற்றழுத்தம் போன்ற அடிப்படையான விஷயங்களில் துவங்கி முழுவதும் பரிசோதிப்பது அவசியம். போதிய பராமரிப்பு இல்லாத கார்கள் மற்றும் தேய்மானம் அடைந்த டயர்களுடன் நெடுஞ்சாலையில் பயணிப்பது உயிருக்கு உலை வைக்கும்.
அதே மாதிரி, நெடுஞ்சாலையில் செல்லும் போது முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளி விட்டு செல்வது அவசியம். நாம சரியா தான் ஓட்டிக்கிட்டு போவோம். ஆனா விபத்து நடக்கிறதுக்கு நாம மட்டுமேவா காரணமா இருக்கோம். யாராவது நம்ம மேல வந்து மோதினாலும் சேதாரம் நமக்கும் தானே? அதனால முன்னால் செல்லும் வாகனத்துடன் 2 வினாடி இடைவெளியில் செல்ல வேண்டும். மிகவும் பாதுகாப்பான பயணத்திற்கு 4 வினாடிகள் இடைவெளியில் பின்தொடர்ந்து செல்வது தான் சரியானது. அப்ப தான்,  முன்னாடி சென்றுக் கொண்டிருக்கும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தாலும் அல்லது பிற பிரச்னைகளின் போதும் பெரிய விபத்துக்களை தவிர்க்க முடியும். நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களை துல்லியமாக பார்ப்பதற்கு ஏதுவாக ரியர் வியூ மிரர்களை சரிசெய்து கொள்வது அவசியம். அத்துடன், உட்புறத்தில் கொடுக்கப்படும் ரியர் வியூ மிரரில் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க ஏதுவாக பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியை மறைக்கும் விதத்தில் பொருட்களை வைக்க வேண்டாம்.  முன்னால் செல்லும் வாகனங்களை வளைவுகளில் முந்துவதை தவிர்க்கவும். அதேபோன்று, கனரக வாகனங்களை பின்தொடர்ந்து முந்தும் போது மிக கவனமாக இருக்கவும். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோன்று, காரின் வேகம், செயல்திறனை மனதில் வைத்து ஓவர்டேக் செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். புதிதாக கார் ஓட்டுபவர்கள் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஓவர் டேக் செய்யும் போது முன்னால் செல்லும் வாகனம் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு இண்டிகேட்டர் மூலமாக சமிக்ஞை தருவது அவசியம். அதுபோன்றே, எதிரில் வரும் வாகனத்திற்கும் ஹெட்லைட்டை ஒளிர விட்டு எச்சரிக்கை செய்வது அவசியம்.  சென்டர் மீடியன் இல்லாத நெடுஞ்சாலைகளில் செல்லும் போது மஞ்சள் கோட்டை தாண்டி சென்று ஓவர்டேக் செய்வது ஆபத்தானது. 

travel

நெடுஞ்சாலைகளில் 80 கிமீ வேகத்தில் செல்லும் போது நிச்சயம் மிகவும் பாதுகாப்பான பயணத்தை பெற முடியும். அத்துடன், அவசர சமயத்தில் காரை நிறுத்துவதற்கு போதிய அவகாசம் கிடைக்கும். மன அழுத்தமும் குறையும். மேலும், அதிவேகத்தில் சென்றால் கூட குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே சேமிக்க முடியும். நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு ஓய்வு இல்லாமல் தொடர்ந்து செல்வதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்து பயணத்தை தொடர்வது விபத்துக்களை தவிர்க்க சிறந்த உபாயமாக இருக்கும். நீண்ட தூர பயணம் செய்யும் போது பெரும்பாலும் பகல் நேரத்திலேயே செல்வது விபத்துக்களை குறைக்க சிறந்த வழி. இரவு நேரத்தில் கண்கள் சோர்வடைந்து விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எவ்வளவு பிரகாசமான ஹெட்லைட் இருந்தாலும் கூட பகல் வேளையில் செல்வதற்கு இணையாக இருக்காது. நம் நாட்டு சாலைகளின் வலது ஓரத்தில் செல்வதற்கான தடம் அதிவேக வாகனங்கள் மற்றும் ஓவர்டேக் செய்யும் வாகனங்களுக்கானது என்பதை மனதில் வையுங்கள்.
இடதுபுறத்தில் ஓவர்டேக் செய்யும் போது வேகத்தை குறைத்து எச்சரிக்கை உணர்வுடன் செல்லுங்கள். சில வேளைகளில் பழுதான வாகனங்கள் இடதுபுற தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். எனவே, நின்று கொண்டிருக்கும் வாகனம் மீது மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே,இடதுபுற தடத்தில் அதிவேகத்தில் செல்வதை தவிர்க்கவும். காரில் பின்னால் அமர்ந்து செல்லும் பலரும் சீட் பெல்ட் அணிவதில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் செல்லும் போது அனைவரும் சீட் பெல்ட் அணிந்து செல்வது அவசியம். விபத்துக்களின் போது உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பாக இதனை கூறலாம். காரின் ரகத்திற்கு தக்கவாறு டிரைவிங் செய்வது அவசியம். செடான் கார்களை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவி அல்லது எம்பிவி ரக கார்களை வளைவுகளில் அதிவேகத்தில் திருப்பும்போது பாடி ரோல் ஏற்பட்டு கவிழ வாய்ப்புண்டு. இந்த விஷயங்களை மனதில் வைத்து ஓட்டும்போது விபத்துக்களை தவிர்க்க முடியும்.