நெஞ்செரிச்சலை சரி செய்யும்  சீரகம், ஓமக் கஷாயம்

 

நெஞ்செரிச்சலை சரி செய்யும்  சீரகம், ஓமக் கஷாயம்

சளி பிடித்துக் கொண்டாலோ, மழையில் நனைந்தாலோ உடனே சிலருக்கு காய்ச்சல் வந்து விடும். சளித் தொல்லைகளைவிட,  சளிப் பிடித்திருக்கும் போது ஏற்படும் நெஞ்சு எரிச்சல் அன்றைய தினம் முழுவதும் ரணமாகவே இருந்து வரும்.

சளி பிடித்துக் கொண்டாலோ, மழையில் நனைந்தாலோ உடனே சிலருக்கு காய்ச்சல் வந்து விடும். சளித் தொல்லைகளைவிட,  சளிப் பிடித்திருக்கும் போது ஏற்படும் நெஞ்சு எரிச்சல் அன்றைய தினம் முழுவதும் ரணமாகவே இருந்து வரும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சீரகம், ஓமம் கஷாயத்தைக் குடிக்கக் கொடுத்தால் உடனே சரியாகிவிடும். 

sukku

தேவையானவை:
ஓமம் – 20 கிராம்,
சோம்பு – 10 கிராம்,
சீரகம் – 5 கிராம், 
உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை – சிறிதளவு
செய்முறை:
ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து, எவ்வள்வு தண்ணீர் சேர்க்கிறோமோ அது, நான்கில் ஒரு பங்காக வற்றும் வரையில் நன்றாக காய்ச்ச வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது, அப்படி கொதிக்கின்ற தண்ணீரில் உத்தாமணி இலையைப் போட்டு ஒரு நிமிடம் கழித்து கீழே இறக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்கலாம். இந்த கஷாயத்தைக் குடிப்பதால், வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.