நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தராமையா : நேரில் சென்று நலம் விசாரித்த எடியூரப்பா

 

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தராமையா : நேரில் சென்று நலம் விசாரித்த எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவிற்கு கடந்த புதன் கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவிற்கு கடந்த புதன் கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் பெங்களூரு பசவேஸ்வரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர், வீட்டிற்கு அனுப்பப்பட்டார். வீட்டிற்கு வந்த பிறகும் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதால் மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை  நன்றாக உள்ளது. 

ttn

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சித்தரா மையாவை இன்று காலை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன், கர்நாடக அமைச்சர்கள் கே.எஸ். ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மாய் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். எடியூரப்பா நேரில் வந்து நலம் விசாரித்தது குறித்துப் பேசிய சித்தராமையா, ” எனது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த முதல்வர்   எடியூரப்பாவுக்கு நன்றி. அரசியல் வேறுபாடுகள்,  தனிப்பட்ட நட்பில் தலையிடக்கூடாது என்று நம்புபவர் நான் “என்று தெரிவித்துள்ளார்.