“நீ 10 நோட்டீஸ் அனுப்புனாலும் என் பதில் ஒன்னு தான்” – தேர்தல் ஆணையத்தை அலறவிட்ட மம்தா!

“நீ 10 நோட்டீஸ் அனுப்புனாலும் என் பதில் ஒன்னு தான்” – தேர்தல் ஆணையத்தை அலறவிட்ட மம்தா!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதற்கு மத்தியில் தேர்தல் பிரசாரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தேர்தல் மேடைகளில் மம்தாவும் மோடியும் காரசாரமாக மோதிக்கொள்வது அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

“நீ 10 நோட்டீஸ் அனுப்புனாலும் என் பதில் ஒன்னு தான்” – தேர்தல் ஆணையத்தை அலறவிட்ட மம்தா!

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, “இஸ்லாம் வாக்காளர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து சிதறடிக்காமல் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார். உடனே மம்தாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் தரப்பினர் புகார் அளித்தனர். அதன் பேரில் இதுதொடர்பாக விளக்கமளிக்க மம்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

“நீ 10 நோட்டீஸ் அனுப்புனாலும் என் பதில் ஒன்னு தான்” – தேர்தல் ஆணையத்தை அலறவிட்ட மம்தா!

இந்த நோட்டீஸுக்கு நாளை காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. தற்போது இதுதொடர்பாகப் பேசியுள்ள மம்தா, “இந்து, இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி குறித்து தினந்தோறும் பேசிவரும் நரேந்திர மோடிக்கு எதிராக ஏன் எந்த புகாரும் இல்லை? நந்திகிராம் பிரச்சாரத்தின்போது மினி பாகிஸ்தான் என நரேந்திர மோடி பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் எனக்கு 10 நோட்டீஸ் அனுப்பினாலும் என்னுடைய பதில் ஒரே மாதிரியாக தான் இருக்கும்” என்றார்.