நீ மண்ணில் பிறக்கும் முன்னரே, வாகை சூடியவர்கள் நாங்கள் ! கோலிக்கு கவாஸ்கர் பதிலடி !

நீ மண்ணில் பிறக்கும் முன்னரே, வாகை சூடியவர்கள் நாங்கள் ! கோலிக்கு கவாஸ்கர் பதிலடி !

தான் பிறப்பதற்கு நடைபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகளை தெரிந்து கொள்ளலாமேலே விராட்கோலி பேசி வருவதாக, சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
கங்குலி களமிறங்கிய பின்னர்தான் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெற தொடங்கியதாக பேட்டி அளித்த கோலிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுனில் கவாஸ்கர் பேசி உள்ளார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை கண்ட முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.
போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான் அதிரடி ஆட்டம் இந்திய அணியில் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அவரை பின்பற்றி நாங்கள் பயணித்து வருவதாக விராட் கோலி தெரிவித்தார்.

gavaskar ganguly kohli

கோலியின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மறுப்பு தெரிவித்து பேசுகையில், இந்திய அணியின் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்திய அணி அதிரடியாக ஆடத் தொடங்கியதே கங்குலி காலத்தில்தான் என கோலி தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். கங்குலி பிசிசிஐ தலைவராக இருப்பதால் அவரை புகழ்ந்து கோலி பேசுவதாக குறிப்பிட்ட கவாஸ்கர், இந்திய அணி 1970 -1980 காலக்கட்டங்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை கண்டுள்ளது என்றும் அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் கிரிக்கெட்டின் வரலாறு தெரியாமல் சிலர் 2000ம் ஆண்டில்தான் கிரிக்கெட்டே தொடங்கியதாக நினைக்கிறார்கள் என்றும் 1970 களிலேயே இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளதாகவும் புகழாரம் சூட்டினார் கவாஸ்கர்.