நீ பற்ற வைத்த நெருப்பொன்று… திருச்சியை திணறடித்த ‘கருஞ்சட்டை பேரணி’

 

நீ பற்ற வைத்த நெருப்பொன்று… திருச்சியை திணறடித்த ‘கருஞ்சட்டை பேரணி’

தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருச்சி: தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சாதி ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கி, சமூக நீதியை நிலைநாட்ட காலமெல்லாம் போராடியவர், தந்தை பெரியார். ஓவ்வொரு மனிதனும் தன்மான உணர்வுடன் வாழ வேண்டும் என்றும், யாருக்கும் இங்கு யாரும் அடிமை இல்லை என்றும் உரக்க சொன்னவர் பெரியார். பெண் விடுதலை கருத்தியலை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த இந்த தமிழ் மண்ணில் எந்த அச்சமுமின்றி எடுத்துரைத்ததற்காக, மைலாப்பூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என பட்டம் வழங்கப்பட்டது. 

இத்தனை சிறப்புகள் நிறைந்த பெரியாரின் கருத்தியலை கேள்விக்குறியாக்கும் வகையில் பேசி, சிலர் அரசியல் செய்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றுள்ளது. மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்ட அமைப்புகள் இந்த பேரணியை ஒருங்கிணைத்துள்ளன. இந்த பேரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கிருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் பெரியாரியம் குறித்து முழக்கங்களும் எழுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இன்று மாலை பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

பிரத்யேக புகைப்பட தொகுப்பு:

periyar

periyar

periyar

periyar

periay

periyar

veeramani

முன்னதாக, இந்த பேரணிக்கும், மாநாட்டுக்கும் தடை விதிக்கக்கோரிய வழக்கில், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு பேரணி, மாநாடு நடத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.