“நீ தோனிகிட்ட இருந்து கத்துக்கோ.. ஆனா இன்னொரு தோனியாக ஆக நினைக்காதே” – ரிஷப் பண்டிற்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்!

“நீ தோனிகிட்ட இருந்து கத்துக்கோ.. ஆனா இன்னொரு தோனியாக ஆக நினைக்காதே” – ரிஷப் பண்டிற்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்க்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் அறிவுரை கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறிய பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என தொடர்ந்து கருத்துக்கள் வெளி வந்தன. ஆனால் மௌனம் காத்து வந்த தோனி, தற்போது வரை விடுப்பில் செல்கிறார். 

rishabh pant

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இவரது பேட்டிங் தற்போது வரை சோதப்பலாகவே இருந்து வருகிறது. கீப்பிங்கிலும் அடுத்தடுத்து தவறுகளை செய்து வருகிறார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில், தற்போது நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் என தொடர் தவறுகள் செய்வதால் இந்திய அணி நிர்வாகம் இவர் மீது அதிருப்தியில் உள்ளது.

அண்மையில் இந்திய அணி துணை கேப்டன் மற்றும் பொறுப்பு கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மாவும் ரிஷப் பண்ட் கீப்பிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாம்பவானான கில்கிறிஸ்ட், தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது குறித்து கருத்து தெரிவித்து அறிவுரையும் கூறியுள்ளார்.

rishabh pany and gilchrist

கில்கிறிஸ்ட் கூறியதாவது: “பொதுவாக ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நான் விரும்பாதவன். இளம் வீரர் ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடுவது முற்றிலும் சரியானது அல்ல. தோனி வளர்ந்து வரும் வீரர்களுக்கு இலக்கை வைத்து விட்டு சென்றுள்ளார். அதை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல. பண்ட் போன்ற வீரர்கள் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்கள்  பண்ட்டை தோனியுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். இளம் வீரருக்கு இது மிகவும் அழுத்தத்தை தரும்” என்றார்

மேலும் ரிஷப் பண்ட்டிற்கு கில்கிறிஸ்ட் அறிவுரையும் கூறினார். அதில், “தோனியை பார்த்து நிறைய கற்றுக் கொள். ஆனால் அவரை போல அப்படியே செய்யவேண்டும் என ஒருபோதும் நினைக்காதே. ஏற்கனவே தோனி என்ற ஒருவர் இருக்கிறார். இன்னொரு தோனி தேவையில்லை. ஆனால் ரிஷப் பண்ட் ஒருவர் மட்டுமே. ஆகையால் முதல் ரிஷப் பண்ட்டாக மாற உன்னை நீ தயார்படுத்திக் கொள். அதுவே உன்னை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்” என்றார்.

-vicky