நீ கோட்சேவா மாறுனா, நான் தாலிபான் – தொழிலதிபர் அதிரடி

 

நீ கோட்சேவா மாறுனா, நான் தாலிபான் – தொழிலதிபர் அதிரடி

போபால் தொகுதி பாஜக வேட்பாளர்  பிரக்யா தாகூர் என்ன வாய் முகூர்தத்தில் கோட்சே குறித்து கருத்து சொன்னாரோ, அது அவரை சுற்றி சுழன்றடிக்கிறது. எதிர்ப்பு அதிகமானதும் தன் கருத்தை திரும்ப பெறுவதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினாலும், காந்தி – கோட்சே குறித்த அவரின் எண்ண ஓட்டம் என்ன என்பது வெட்டவெளிச்சம்.

போபால் தொகுதி பாஜக வேட்பாளர்  பிரக்யா தாகூர் என்ன வாய் முகூர்தத்தில் கோட்சே குறித்து கருத்து சொன்னாரோ, அது அவரை சுற்றி சுழன்றடிக்கிறது. எதிர்ப்பு அதிகமானதும் தன் கருத்தை திரும்ப பெறுவதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினாலும், காந்தி – கோட்சே குறித்த அவரின் எண்ண ஓட்டம் என்ன என்பது வெட்டவெளிச்சம். இன்னும் நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

takur

எதிர்கட்சிகள், காந்தியவாதிகள், காந்தியின் கொள்ளுப்பேரன் என பலரும் இந்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து வருவது பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சியின் முக்கியமான பிரமுகரின் இந்த தவறான கருத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா. தொழிலதிபர்களுக்கே உரிய கழுவுற  மீனில் நழுவும் பாணியை பின்பற்றாமல், தன் மனதுக்கு சரியென படுவதை துணிச்சலாக ட்விட்டரில் வெளிப்படுத்துபவர் ஆனந்த் மகிந்திரா

anand mahindra

பிரக்யாவின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள அவர், “ஏழை நாடு என ஒரு காலத்தில் பிற நாடுகள் நம்மேல் பரிதாபம் கொண்டிருந்தாலும், இது மகாத்மாவின் பூமி என்ற அடையாளத்தில் பெருமிதம் கொண்டிருந்தோம். அந்த பாரம்பரியம் காக்கப்படவேண்டும், இல்லை என்றால் நாமும் தாலிபான்களாகிவிடுவோம்” என்று ட்வீட்டியிருக்கிறார்.