‘நீ ஒரு போலி இஸ்லாமியன்’ : நடிகர் ஷாருக்கானை வசைபாடும் நெட்டிசன்கள்!

 

‘நீ ஒரு போலி இஸ்லாமியன்’ : நடிகர் ஷாருக்கானை வசைபாடும் நெட்டிசன்கள்!

சமீபத்தில்  ஷாருக்கான்  தந்து குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் ஷாருக்கானை நெட்டிசன்கள் சிலர் கடுமையாக  வசைபாடி வருகின்றனர்.

sharukhan

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பாலிவுட்டில்  உச்ச நட்சத்திரமாக உள்ளார். சமீபத்தில்  ஷாருக்கான்  தந்து குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது நெற்றியில் திலகமிட்டு மனைவி, மற்றும் மகனுடன் எடுத்துள்ள புகைப்படத்தை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

இதைக் கண்ட நெட்டிசன்கள்  சிலர், ‘நீ ஒரு போலி இஸ்லாமியன் என்றும் ஒரு இஸ்லாமியராக இருந்தும் எப்படி ஹிந்து தீபாவளியை ஷாருக்கான் கொண்டாடலாம்’ என்றும் சாடி வருகின்றனர். இதற்கு  சிலரோ, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.