‘நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்’: கவினை பிரிந்த சாக்ஷி

 

‘நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்’: கவினை பிரிந்த சாக்ஷி

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ்யில்   பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார். அதனால் கவினின் நேர்மையான குணத்தால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

ஆனால் நாட்கள் செல்ல, செல்ல தான் இவரின் உண்மையான குணம் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியே இடையே இவர் பழகி வரும் செயல் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் தினந்தினம் வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

sakshi

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நேற்றைய சண்டை இன்றும் தொடர்வது போன்று அமைந்துள்ளது. ஆம்… ஒரு சாக்லேட் விஷயத்தில் சாக்ஷி-கவினிடையே மோதல் ஏற்பட்டது. தற்போது அதைச் சரி செய்யும் முயற்சியில் கவின் இறங்கியுள்ளது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது . அதில், ‘4பேர் இருக்கட்டும், 2பேர் இருக்கட்டும் நான் நண்பனாக பழகிட்டு இருக்கன் சொன்னது, உண்மை தானா? என்று சாக்ஷி கேட்க அதற்கு கவின், ‘possesive வந்த பிறகு இதை வளக்க வேண்டாம், நிறுத்தி கொள்ளலாம் என்று நம்ப பேசலையா? என்று கேட்டுள்ளார். 

அதை தொடர்ந்து, ‘நான் பேச வந்த அப்போ பேசாத’னு மூஞ்சில அடிச்சது நீ? என்று கூறி சமாதானம் செய்ய இறங்கி வருகிறார். ஆனால் அதையெல்லாம் ஏற்க மறுத்த சாக்ஷி, ‘இனிமே நான் என் கேம் விளையாடுறன், நீ உன் கேம் விளையாடு… எல்லாமே முடிஞ்சிது’ என்று மிகவும் கோபத்துடன் கூறுவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது . இந்த கலவரம் பெரிதாகுமா என்பதை இன்றைய தொடரில் தெரிய வரும்.