நீ இன்னும் வளரனும் பா… ஓபிஎஸ் மகனை கழட்டிவிட்ட மோடி!

நீ இன்னும் வளரனும் பா… ஓபிஎஸ் மகனை கழட்டிவிட்ட மோடி!

தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக 542 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெரும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும். தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக – அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது பாஜக – அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் ஓபிஎஸ்- இன் முயற்சி தோல்வியடைந்து ரவீந்தரநாத் மோடியால் கழட்டிவிடபட்டார். எம். பி சீட் கிடைக்கும் முன்பே கல்வெட்டுகளையெல்லாம் வைத்த ரவீந்தரநாத்க்கும் பதவி கிடைக்காதது பெரும் இடியாக அமைந்தது.