நீ அனாதை கெடையாது முகின்: கண்கலங்கும் ரேஷ்மா

 

நீ அனாதை கெடையாது முகின்: கண்கலங்கும் ரேஷ்மா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

mugen

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் தற்போது பைனலுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  இதுவரை 12 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.குறிப்பாக தர்ஷன் நேற்று வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் , ‘பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய பாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட் அடிக்கின்றனர். அப்போது ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் பேசும் ரேஷ்மா, ‘நம்ம எல்லாரும் ஏங்குறது அன்புக்காக தான்..நானா இருக்கட்டும், முகினா  இருக்கட்டும்.  இங்க எல்லாரும் அப்படி தான் முகின். நீ மட்டும் இல்ல. இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது.  உனக்கு அன்பு இல்லாத உலகமே  கிடையாது. நீ வெளியில வந்தா தான் தெரியும் உனக்கு எவ்ளோ அன்பு இருக்குன்னு’ என்று சொல்லி கண்கலங்குகிறார்.