நீலகிரி முழுமைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை, எடுத்துட்டுப்போய் அபராதம் கட்டாதீங்க!

 

நீலகிரி முழுமைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை, எடுத்துட்டுப்போய் அபராதம் கட்டாதீங்க!

ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களின் நலனை கருத்தில்கொண்டு, மாவட்டம் முழுவதிலும் 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் குன்னூர் பூங்கா, தொட்டபெட்டா, படகு குழாம், பைகாரா உள்ளிட்ட இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சுற்றுலாத்துறை அமைத்து வருகிறது.

நீலகிரி முழுமைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை, எடுத்துட்டுப்போய் அபராதம் கட்டாதீங்க!

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நீலகிரி, அதாவது தமிழில் ஊட்டி, முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். பிளாஸ்டிக் இல்லா நீலகிரியாக மாற்றும்பொருட்டு, நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் இந்த உத்தரவு படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களின் நலனை கருத்தில்கொண்டு, மாவட்டம் முழுவதிலும் 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் குன்னூர் பூங்கா, தொட்டபெட்டா, படகு குழாம், பைகாரா உள்ளிட்ட இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சுற்றுலாத்துறை அமைத்து வருகிறது. குடிக்க தண்ணீர் இல்லேன்ன என்ன பண்றது என்ற கவலையில் வீட்டிலிருந்தே பத்து பதினைந்து பாட்டில்களை அள்ளிச்செல்ல வேண்டாம். அரசாங்கம் போதுமான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. எனவே, நீலகிரியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம். வன உயிர்கள் காப்போம்.