நீலகிரியில் மீண்டும் கனமழை! பாறைகள் உருண்டு சரிந்தன!

 

நீலகிரியில் மீண்டும் கனமழை! பாறைகள் உருண்டு சரிந்தன!

மீண்டும் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், கனமழையினால் நீலகிரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டு உதகை, குன்னூர் பகுதிகளை எல்லாம் சின்னாபின்னமாக்கிச் சென்ற நிலையில், தற்போது நீலகிரியில் மீண்டும் கனமழை துவங்கியுள்ளது.  நேற்று இடைவிடாது 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் உதகை மற்றும் குன்னூரில் நெடுஞ்சாலையில், குந்தா அணைப்பகுதியில் உள்ள பாலத்தின் அருகே கனமழையினால் திடீரென பாறைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து சரிந்து கீழே உருண்டு விழுந்தன. 

Rain

அதிர்ஷ்டவசமாக பாறைகள் உருண்டு விழும் போது அந்த வழியாக வந்த 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Rock