நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்!

 

நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்!

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், இந்தப் பொருட்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகளும் கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் சோதனை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது

மாவட்டத்தின் இயற்கை எழிலைப்  பாதுகாக்கவும், வனவிலங்குகள் நலன் கருதியும், நீலகிரி  மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர்/குளிர்பான பாட்டில்களுக்கு, வருகிற சுததந்திர தினம் முதல் தடை விதிக்கப்படுகிறது. வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுடன் இதற்கான ஆலோசனையை  மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா மேற்கொன்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள், பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nilgiris

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், இந்தப் பொருட்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகளும் கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் சோதனை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா செல்வர்கள், பிளாஸ்டிக் குடிநீர், உணவு பாக்கெட்களை எடுத்து செல்லவேண்டாம்!