நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?

 

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?

குழந்தையின் சுண்டு விரலளவே இருக்கும் அதலைக்காயை உப்புச்சேர்த்து வேகவைத்தோ,அல்லது மோரில் ஊறவைத்தோஎடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு,அதை வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் வருடம் முழுதும் இதை பயன் படுத்த முடியும்

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா! இப்படி ஒரு காய் இருப்பதே பலருக்கும் தெரியாது!

அதலைக்காய்,தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ,குறிப்பாக மதுரை சிவகங்கை விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மக்கள் இதை நெடுங்காலமாக உணவில் சேர்த்து வந்துள்ளனர்.இதை யாரும் ஒரு பயிராக விளைவிப்பதில்லை! தானாக முளைத்து வேலிகளில் படர்ந்திருக்கும்.

athalakkai

ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் இவற்றை பறித்து வந்து விற்கிறார்கள்.இதன் தாவரவியல் பெயர் momordica cymbalaria என்பதாகும்.பாகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கொடி இனம் இது.நீரிழிவு,குடல் புழு போன்றவற்றுக்கு அதலைக்காய் சிறந்த மருந்தாகும்.

இதன் சிறப்பே இதை உணவில் பலவகையில் சேர்த்துக்கொள்ள முடியும் என்பதே!குழந்தையின் சுண்டு விரலளவே இருக்கும் அதலைக்காயை உப்புச்சேர்த்து வேகவைத்தோ,அல்லது மோரில் ஊறவைத்தோஎடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு,அதை வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் வருடம் முழுதும் இதை பயன் படுத்த முடியும்.

தேவைப்படும் போது காயவைத்துள்ள அதலைக்காயை பொன் முறுவலாக வறுத்து, மோர்-அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.பாகற்காய் காரக்குழம்பு செய்வது போல அதலைக்காய் காரக்குழம்பும் செய்யலாம்.இதன் கசப்புச்சுவைக்கு பழகிப்போன விருதுநகர் பகுதி மக்கள் அதலைக்காயை பொரியல் செய்தே சாப்பிடுகிறார்கள்.

bitter gourd

பெரும்பாலும் வரண்ட நிலத்திலேயே வளரும் அதலைக்காய் வெய்யில் அதிகமாகும்போது முற்றிலும் கருகிப்போய்விடும்.ஆனால் இந்தக் கொடியுடன் இனைந்து பூமிக்குள் மறைந்திருக்கும் அதலை கிழங்கு அப்போதும் அழியாமல் உயிருடன் இருக்கும்.மழை பெய்தவுடன் மறுபடியும் துளிர்த்து காய்விடத் தொடங்கிவிடும்.

இப்போதெல்லாம் இது சென்னை கே.கே.நகரிலேயே கிடைக்கிறதாம்!
மதுரை திருமங்கலம் மார்க்கெடில் கிலோ 20 ரூபாய்.சென்னை,கே.கே நகரில் கிலோ 100 ரூபாய்!

நீரிழிவு குடற்புழு ஆகிய நோய்களை தீர்ப்பதுடன் , தினமும் ஒரே மாதியான உணவுகளைச் சாப்பிட்டு போரடிக்கிறது என்று நினைப்பவர்களுக்கு இந்த புது சுவை புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.சீஸன்  நேரத்தில் வரத்து அதிகமாக இருக்கும் போது அன்றாட உணவுகளில் சேர்த்துக்கலாம்.