நீரில் மூழ்கி போன ரியல் எஸ்டேட் மனைகள்…அதிர்ச்சியில் மக்கள்!

 

நீரில் மூழ்கி போன ரியல் எஸ்டேட் மனைகள்…அதிர்ச்சியில் மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் புதிய மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது தான். இதனால் அங்கு கைவிடப்பட்ட  விவசாய நிலங்கள்  மனைகளாக மாறியுள்ளது.

செங்கல்பட்டிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் உள்ள  ஒழத்தூர் என்ற ஏரியை ஒட்டிய பகுதிகள் விற்பனைக்கு வந்தன.  இதற்கு காரணம் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் புதிய மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது தான். இதனால் அங்கு கைவிடப்பட்ட  விவசாய நிலங்கள்  மனைகளாக மாறியுள்ளது.

ttn

சமீபத்தில் பெய்த  மழையில்  இந்த இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி போயுள்ளது. இதுகுறித்து கூறும் அப்பகுதிவாசிகள், நீர் தேங்கும் இடங்களில் ஆக்கிரமித்து மனைகளாக விற்பதால் தான் அதிக பாதிப்புகள் உண்டாகிறது. இதற்கு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை  என்று கவலை தெரிவிக்கின்றனர்.

ttn

சென்னைக்கு மிக அருகில் என்ற வீண் விளம்பரத்தை நம்பி வீட்டுமனைகள் வாங்கினால் அது ஏரிகளுக்கு மிக அருகிலிருந்து மக்களை அச்சுறுத்துகிறது. இதுபோன்ற தேவையற்ற போலி விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாறுவது தான் மிச்சம்.