நீரவ் மோடியை கைது செய்ய இந்தியா விரும்பவில்லை – உண்மையை உடைத்த இங்கிலாந்து

 

நீரவ் மோடியை கைது செய்ய இந்தியா விரும்பவில்லை – உண்மையை உடைத்த இங்கிலாந்து

இந்தியா போதுமான கவனம் செலுத்த விரும்பாததால் தான் நீரவ் மோடி வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா போதுமான கவனம் செலுத்த விரும்பாததால் தான் நீரவ் மோடி வழக்கு இன்னும்  முடிக்கப்படாமல் இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோற்றத்தை மாற்றிய நீரவ் மோடி 

இந்தியாவில் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது புகார் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம்  கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக, பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார்  உள்ளது. இந்த கடனை பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் அவர் லண்டன் வீதியில் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த வாரம் வெளியாகின.

நீரவ் மோடி

இது பற்றி விசாரித்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று, இந்தியா போதுமான கவனம் செலுத்த விரும்பாதது தான்  நீரவ் மோடி விவகாரம் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் என்று இங்கிலாந்து  தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. நீரவ் மோடி விவகாரம் குறித்து அவர்கள் கேட்ட எந்த விளக்கத்தையும் இந்தியா தரவில்லை என்றும், நாங்கள் இந்தியா வந்து உதவலாமே என்று கேட்டதற்கு இந்தியா பதில் அளிக்கவில்லை என இங்கிலாந்து தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

அமலாக்கத்துறை பதில் 

இந்நிலையில், நீரவ் மோடியை  இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன என்றும்,  இங்கிலாந்தின் பதிலுக்கு தாங்கள் காத்திருப்பதாகவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நீரவ் மோடி

இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 2018 ஜூலையில் இந்தியா கொண்டு வருவதற்கு இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தோம். நீரவ் மோடியை நாடு கடத்துவது குறித்த ஆவணங்கள் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத்துறை லண்டன் செல்கிறது 

தற்போது, நீரவ் மோடியை இந்திய கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும், விரைவில் அவரைக் கைது செய்ய அமலாக்கத்துறை லண்டன் செல்ல இருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.