நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்த பிறகே ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை….. மத்தியஸ்த குழு தகவல்

 

நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்த பிறகே ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை….. மத்தியஸ்த குழு தகவல்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை படித்து பார்த்த பிறகே ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம் என மத்தியஸ்தர்களில் ஒருவரான சஞ்சய் ஹெக்டே தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக்கோரி வழக்கறிஞர் அமித் ஷானி மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்த் கிஷோர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள்  சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு, சாலையில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்த மத்தியஸ்த குழுவை நியமனம் செய்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த மத்தியஸ்த குழுவில், மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சஹானா ராமசந்திரன் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியஸ்த குழு எப்போது போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த மத்தியஸ்தர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறியதாவது:

மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே

நாங்கள் 3 பேரும் இன்னும் சந்திக்கவில்லை மற்றும் நீதிமன்றம் எங்களிடம் ஒப்படைத்த பணியை எப்படி தொடருவது என்பதற்கான மூலோபாயத்தை இன்னும் திட்டமிடவில்லை. செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு தாமதமாக கிடைத்த நீதிமன்ற உத்தரவை படிக்க விரும்புகிறோம். அதன்பிறகே அடுத்த நடவடிக்கைகளை  (ஷாஹீன்பாக் சென்று போராட்டக்காரர்களை சந்திப்பது) மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.