நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகள்: விரட்டி பிடித்த நீதிபதி – வைரல் வீடியோ!

 

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகள்: விரட்டி பிடித்த நீதிபதி – வைரல் வீடியோ!

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை நீதிபதி ஒருவர் துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

வாஷிங்டன்: நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை நீதிபதி ஒருவர் துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் செஹாலிஸ் நகர நீதிமன்றம் உள்ளது. இங்குக் குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோடே ஹோவர்ட் மற்றும் ஜேக்கப்சன் என்ற இரு விசாரணை கைதிகள் நீதிபதி பாசார்ட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கைதிகள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினர். 

 

இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால்  நீதிபதி சிறிதும் தாமதிக்காமல்  தப்பியோடிய கைதிகளைத் துரத்தினார். இதில் குற்றவாளி ஒருவரை  மடக்கிப் பிடித்தார். அதே சமயம் கைதி ஜேக்கப்சனை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் தற்போது  இதன்  சிசிடிவி காட்சிகள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகின்றன.