நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை நிறுத்திவைப்பு –  உயர்நீதிமன்றம்

 

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை நிறுத்திவைப்பு –  உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் அனைத்திற்கும் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு அனைத்து நீதிமன்ற பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட பட்டிருந்தது. கீழமை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நீதிமன்றங்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ttn

இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறையை நிறுத்தி வைப்பதாக தலைமை பதிவாளர் சி குமரப்பன் அறிவித்துள்ளார். மேலும் இன்று காலை நடைபெற்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் வழக்கமான நாட்களை போன்ற நீதிமன்ற பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கும், தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் இது பொருந்தும்.