நீண்ட நாளுக்கு லாக்டவுன்….. கொரோனாவை காட்டிலும் பசியால் அதிக உயிர்இழப்புகளை இந்தியா காணும்….. இன்போசிஸ் நாரயண மூர்த்தி எச்சரிக்கை……..

 

நீண்ட நாளுக்கு லாக்டவுன்….. கொரோனாவை காட்டிலும் பசியால் அதிக உயிர்இழப்புகளை இந்தியா காணும்….. இன்போசிஸ் நாரயண மூர்த்தி எச்சரிக்கை……..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நீண்ட நாட்களுக்கு அமல்படுத்தினால், கொரோனாவால் ஏற்படும் உயிர்பலிகளை காட்டிலும் பசியால் அதிக உயிர் இழப்புகளை இந்தியா பார்க்கும் என இன்போசிஸ் நாரயண மூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் முன்னணி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி ஒன்றில் வெபினாரில் வர்த்தக தலைவர்களிடம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த சூழ்நிலையை (லாக்டவுன்) இந்தியா நீண்ட காலத்துக்கு தொடர முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு கட்டத்தில் பசியால் ஏற்படும் உயிர் இழப்பு இதுவரை தொற்றுநோயால் ஏற்பட்ட உயிர்பலியை காட்டிலும் அதிகமாக இருக்கும்.

லாக்டவுன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இறப்பு விகிதம் 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். நம் நாட்டில் பல்வேறு காரணங்களால்  ஆண்டுதோறும் 90 லட்சம் இறக்கின்றனர். இதில் 25 சதவீத உயிர் இழப்புகள் மாசுவால் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் அதிகம் மாசுபட்ட நாடுகளில் ஒன்றாக நம் நாடு உள்ளது. 90 லட்சம் மக்கள் இயற்கையாக இறப்பதுடன் கடந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்த ஆயிரம் உயிர்பலியை ஒப்பிட்டால், வெளிப்படையாக பயப்பட வேண்டியது இல்லை என நாம் நினைக்க வேண்டும்.

இறந்தவரின் உடலை அப்புறப்படுத்தும் பணியாளர்கள்

அமைப்பு சாரா அல்லது சுய தொழிலில் சுமார் 19 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் கணிசமான பகுதியினர் லாக்டவுனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருக்கக்கூடும். லாக்டவுன் நீண்ட காலம் தொடர்ந்தால் மேலும் அதிகமானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கொரோனா வைரஸை புதிய இயல்பானது என்பதை இந்தியர்கள் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தொற்றுநோய்களின் பரவலான நோயை தடுக்க இந்திய தொழில்முனைவோர் கண்டுபிடிப்புகளை முடுக்கிவிட வேண்டும். கணித மாடலிங் மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வை பயன்படுத்துதல் மற்றும் அரசுக்கு உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் தகவல்கள் அடிப்படையில் முடிவு எடுக்க முடியும் மற்றும் உணர்ச்சிகளால் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.