நீண்ட நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் முன் தோன்றிய விஜயபாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?

 

நீண்ட நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் முன் தோன்றிய விஜயபாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசிவருகிறார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசிவருகிறார். இதனால் விஜயபாஸ்கர் கொரோனா பாதிப்பில் புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

vijayabaskar

அப்போது பேசிய அவர், “மருந்தகங்களில் நீண்ட நேரம் மருத்துவர்களின் குறிப்புகளோடு நிற்பதை தவிர்க்க முதல்வரின் உத்தவிற்கு இணங்க 3000ஆயிரம் மருந்தகங்களை இணைத்து இலவச எண்ணை தொடங்கியுள்ளோம்.18001212172 இந்த எண்ணிற்கு எங்கிருந்து அழைகிறார்களோ அங்கு அங்குள்ள மருந்தகத்திற்கு கால் சென்று அம்மருந்தகத்திலிருந்து நேரிடியாக வீட்டிற்கே வந்து மருந்து வழங்கப்படும். ஆனால் மருத்துவரின் குறிப்பு இதில் மிக அவசியம். தற்பொழுது சென்னையிலும் சில தினங்களில் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது” என தெரிவித்தார்.