நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.45 லட்சம் கோடி லாபம்…… சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்தது…

 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.45 லட்சம் கோடி லாபம்…… சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்து வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்தது.

பரவி வரும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பை உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வர்த்தகத்தின் இடையே ஏற்றம் கண்டது. இது போன்ற காரணங்களால் உலக பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

பரவும் கொரோனா வைரஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., அல்ட்ராடெக்சிமெண்ட், என்.டி.பி.சி. மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.டி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை மட்டும் சரிந்தது.

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,248 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,156 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.27 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பல நாட்களுக்கு பிறகு இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.45 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 479.68 புள்ளிகள் உயர்ந்து 38,623.70 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 170.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,303.30 புள்ளிகளில் முடிவுற்றது.