நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

 

நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

சிவகங்கை தொகுதி பாஜக வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக ஹெச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் – பாஜக இடையே இந்த தொகுதியில் நேரடி போட்டி நிலவுகிறது

சென்னை: நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை  முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் தில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் முடிவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காணும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அதில், திருவள்ளூரில் ஜெயக்குமார், விருதுநகரில் மாணிக் தாகூர், தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதிமணி, கிருஷ்ணகிரியில் செல்லக்குமார், ஆரணியில் விஷ்ணுபிரசாத், கன்னியாகுமரியில் வசந்தகுமாரும் புதுச்சேரியில் வைத்தியலிங்கமும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chidambaram

தமிழகத்தில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சிவகங்கையில் மட்டும் இழுபறி நீடித்து வருவதால், அங்கு வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது.

இந்நிலையில், சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலிலும் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தையே காங்கிரஸ் கட்சி களமிறக்கியது. ஆனால், அவர் தோல்வியை தழுவினார் என்பது கவனிக்கத்தக்கது.

karti chidambaram

அதிமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி பாஜக வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக ஹெச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் – பாஜக இடையே இந்த தொகுதியில் நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ஒரு ஆளை எம்.பி ஆக்கினால் வாக்காளனுக்கு என்ன வரும்னு தெரியாது! அவருக்கு என்னெல்லாம் வரும்னு தெரியுமா!?