நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றும் லேடி சூப்பர் ஸ்டார்!?

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றும் லேடி சூப்பர் ஸ்டார்!?

மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க நடிகை  விஜயசாந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்:  மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க நடிகை  விஜயசாந்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

mahesh babu

தெலுங்கில் முன்னணி  நடிகர் மகேஷ்பாபு. இவர் தற்போது  சரிலேரு நீக்கெவரு படத்தில் நடிக்கவுள்ளார். மகேஷ் பாபுவின் 26-வது படமான இதை  அனில் ரவிபுடி இயக்குகிறார். அனில் சுங்கரா, தில் ராஜு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

vijayashanthi

இந்நிலையில் இப்படத்தின் மூலம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகை விஜயசாந்தி. தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவின்  தந்தையான  கிருஷ்ணாவுடன் ‘ஹிலாடி கிருஷ்ணுடு’ படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. தமிழில் மன்னன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் நயன்தாராவுக்கு முன்பே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் பெற்றவர். இதுவரை 180 படங்கள் வரை  நடித்துள்ள இவர் திரைத் துறையை விட்டு விலகி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.