நீட் தேர்வு விவகாரத்தில் கைதான வெங்கடேஷ், முகமது ஷபிக்கு ஜாமீன் மறுப்பு..!

 

நீட் தேர்வு விவகாரத்தில் கைதான வெங்கடேஷ், முகமது ஷபிக்கு ஜாமீன் மறுப்பு..!

அதிரடி விசாரணையில் ஈடுபட்ட சிபிசிஐடி, வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் ராகுல், பிரவீன், இர்ஃபான் மற்றும் அவர்களது தந்தைகளைக் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். 

சில நாட்களுக்கு முன்னர் தேனி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும்  கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி காவல்துறையினரிடம் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் இன்னும் நிறையப் பேர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அதிரடி விசாரணையில் ஈடுபட்ட சிபிசிஐடி, வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் ராகுல், பிரவீன், இர்ஃபான் மற்றும் அவர்களது தந்தைகளைக் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். 

Udit surya father

இந்நிலையில், இர்ஃபானின் தந்தை, போலி மருத்துவர் முகமது ஷபியும், உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேஷும் ஜாமீன் அளிக்கக் கோரி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி மனு அளித்திருந்தனர். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பன்னீர் செல்வம் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்கள் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Irfan father