நீட் தேர்வு குறித்து விசாரணை தொடர்கிறது: அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்..

 

நீட் தேர்வு குறித்து விசாரணை தொடர்கிறது: அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்..

மருத்துவப் படிப்புக்காக நடத்தப் படும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மாவட்டத்தில் பயிலும் உதித் சூர்யா கைதானர்.

மருத்துவப் படிப்புக்காக நடத்தப் படும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மாவட்டத்தில் பயிலும் உதித் சூர்யா கைதானர். அதன் பின், அவர் சிபிசிஐடி காவல்துறையினரிடம் உதித் சூர்யா அளித்த வாக்குமூலத்தின் படி, தருமபுரி மாவட்டத்தில் பயிலும் இர்ஃபான் கைது செய்யப்பட்டார். தொடரும் இந்த ஆள் மாறாட்டங்கள் காவல்துறையினரிடையேயும் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்திடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Minister KP Anbazhagan

இது குறித்து திருப்பதியில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பிறகே நீட் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர், அதிலேயே ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக வெளிவந்த தகவல்களின் படி, குற்றம் செய்த மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

NEET

மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதை தொடர்பான பாடங்கள் செயப்படுத்தப் போவது குறித்துப் பேசிய அவர், பன்னிரெண்டு பாடப் பிரிவுகளை அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்த தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.