நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து சிபிசிஐடியிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தது உயர்நீதி மன்றம்..

 

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து சிபிசிஐடியிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தது உயர்நீதி மன்றம்..

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைதான உதித் சூர்யாவும் அவரது தந்தையும் சிபிசிஐடியிடம் கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஆள்மாறாட்டத்தில் ஒரு பெரிய கும்பலே மறைந்திருந்தது அம்பலமாகியது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைதான உதித் சூர்யாவும் அவரது தந்தையும் சிபிசிஐடியிடம் கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஆள்மாறாட்டத்தில் ஒரு பெரிய கும்பலே மறைந்திருந்தது அம்பலமாகியது. அதன் படி, வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இர்ஃபான், பிரவீன், ராகுல் ஆகிய மூன்று பேரையும் அவர்களது தந்தைகளையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

NEET

இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதி மன்றத்தில் எழுந்தது. அதில் உயர்நீதி மன்ற நீதிபதிகள், இத்தனை மாணவர்கள் கைது செய்யப் பட்ட பிறகும், ஒரே ஒரு தரகர் தான் உதவினார் என்பது நம்பும் படியாக இல்லை, எத்தனை தரகர்கள் இதில் ஈடு பட்டுள்ளனர், எவ்வளவு பணம் கைமாறி உள்ளது, இன்னும் எத்தனை மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்துள்ளனர் என சரமாரியாக சிபிசிஐடியிடம் கேள்விகளை முன்வைத்தது. 

High court

மேலும், நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்த அறிக்கையை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிசிஐடி க்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.