நீட் ஆள் மாறாட்டத்திற்கு ரூ. 20 லட்சம் லஞ்சம்!

 

நீட் ஆள் மாறாட்டத்திற்கு ரூ. 20 லட்சம் லஞ்சம்!

நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சில நாட்களுக்கு முன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் மாணவரின் குற்றம் நிரூபிக்கப் பட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது மதுரை உயர் நீதிமன்றம். இதனால், தலைமறைவான உதித் சூர்யாவை நேற்று தனிப்படைக் காவல் துறையினர் குடும்பத்துடன் திருப்பதியில் கைது செய்தனர். அதன் பின், சிபிசிஐடி விசாரணைக்குக் கொண்டு செல்லப் பட்ட உதித் சூர்யா, கடும் விசாரணைக்குப் பின்  இரண்டு முறை தேர்வெழுதி தோல்வி அடைந்ததால் ஆள் மாறாட்டம் செய்ததாக மாணவரும் மாணவரின் தந்தையும்  ஒப்புக் கொண்டனர். மேலும், இதற்குச் சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாகவும், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு;நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய உதவிய இடைத்தரகரின் விவரங்களும் கிடைத்துள்ளது. 

case

இந்நிலையில் நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய மும்பையிலுள்ள பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உதித் சூர்யா, அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இடைத்தரகர்கள் விவரம் கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் மும்பை செல்ல முடிவு செய்துள்ளனர்.