நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷாமு 

 

நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷாமு 

நடிகை ஷாலு ஷாமு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சென்னை: நடிகை ஷாலு ஷாமு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதைத்தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அப்போது அங்கு நீச்சல் உடை அணிந்து கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்ட மேனிக்கு வசைபாடி வருகின்றனர். வழக்கம் போல் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.