நீங்க வீட்டுக்குள் இருந்து எங்க அப்பாவுக்கு உதவ முடியுமா?…. மக்களின் மனதை கொள்ளையடித்த அருணாசல பிரதேச சிறுமியின் போஸ்ட்

 

நீங்க வீட்டுக்குள் இருந்து எங்க அப்பாவுக்கு உதவ முடியுமா?…. மக்களின் மனதை கொள்ளையடித்த அருணாசல பிரதேச சிறுமியின் போஸ்ட்

நீங்க வீட்டுக்குள் இருந்த எங்க அப்பாவுக்கு உதவ முடியுமா? என்ற அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியின் மெசேஜ் தற்போது பலரது மனதையும் கவர்ந்து இழுத்துள்ளது.

மத்திய சிறுபான்மை துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ டிவிட்டரில், அருணாசல பிரசேதத்தை சேர்ந்த 9 வயது சிறுமியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, அருணாசல பிரதேசத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் ஒரு இனிமையான சின்ன பெண்ணிடம் இருந்து ஒரு உணர்ச்சிமிக்க மற்றும் சக்தி வாய்ந்த செய்தி. ஒவ்வொருவரின் பாதுகாப்பாக களத்தில் இறங்கி அயராது பணியாற்றுபவர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்களை பாராட்டுவோம் என பதிவு செய்து இருந்தார்.

மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ

மத்திய இணையமைச்சர் போஸ்ட் செய்த இருந்த சிறுமியின் புகைப்படம் தற்போது பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது. அந்த படத்தில் சிறுமி கையில் பிடித்து இருக்கும் பேப்பரில், என்னுடைய அப்பா போலீஸ்காரர். உங்களுக்கு உதவுவதற்காக அவர் என்னிடமிருந்து விலகியே இருக்கிறார். நீங்கள் வீட்டுக்குள் இருந்து அவருக்கு உதவ முடியுமா? என எழுதப்பட்டு இருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவல் துறையினர்

21 நாள் லாக்டவுன் சமயத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருந்து தனது தந்தைக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்துள்ள சிறுமியின் உணர்ச்சிபூர்வமான இந்த செய்தியை நெட்டின்சன் பாராட்டி வருகின்றனர். மேலும் சட்டம் ஒழுங்கை பராமரித்து வரும் அந்த சிறுமியின் தந்தை உள்ளிட்டோருக்கு மரியாதை அளித்தனர்.