நீங்க பிரியாணி பிரியரா…அப்போ இதை அவசியம் தெரிஞ்சுக்கங்க…வரலாறு முக்கியம் பாஸ்!

 

நீங்க பிரியாணி பிரியரா…அப்போ இதை  அவசியம் தெரிஞ்சுக்கங்க…வரலாறு முக்கியம் பாஸ்!

Biriyian என்கிற சொல்லுக்கு வறுத்த சோறு என்று பொருள்

Biriyian என்கிற சொல்லுக்கு வறுத்த சோறு என்று பொருள். இதன் பிறப்பிடம் இன்றைய ஈரான்,ஈராக் பகுதி என்று உணவு சரித்திர ஆய்வாளர்களின் முடிவுகள் தெரிவிக்கின்றன.1398 செப்டம்பர் மாத இறுதியில் படை எடுத்து வந்த தைமூரின் வீரர்கள்தான் இந்தியாவுக்குள் பிரியாணியை கொண்டு வந்தார்கள் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் அதற்கெல்லாம் பலகாலம் முன்பே தமிழ் நிலத்தில் ஊன் சோறு இருந்திருக்கிறது.அரிசி,இறைச்சி,மஞ்சள், மிளகு, கொத்துமல்லித்தூள், நெய், உப்பு,புன்னை இலை சேர்த்து ஊன்சோறு தயாரிக்கப் பட்டது.

briyani

பொதுவாக பெரும் படைகள் ஒரு நிலப்பரப்பிலிருந்து போருக்கு புறப்படும்போது அவர்களால் அதிகளவில் உணவு பொருட்களை எடுத்துச்சென்றாலும்,இறைச்சியை எடுத்துச்செல்லும் தொழில் நுட்ப வசதி இல்லை.அதனால் இரவில் தாவளம் அமைத்து தங்கும் இடத்தில் கிடைக்கும் மிருகங்களை வேட்டையாடி அவற்றை சமைத்து உண்டிருக்கிறார்கள். 

அங்கங்கே கிடைக்கும் புதுப்புது வாசனைப்  பொருட்கள் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு நிலவெளியிலும் பிரியாணி புதுப்புது வடிவம் எடுத்தது. பிரியாணியின் எளிமைதான் அதன் வெற்றி ரகசியம்,அதற்கு சைட்டிஷ் வேண்டாம்,வெறும் இறைச்சியும் அரிசியும் மசால பொருட்களும்,ஒரே ஒரு பாத்திரம் மட்டும் போதும்.

briyani

ஆனால்,இன்று நாம் கொண்டாடும் பிரியாணி வெளியில் இருந்து வந்தது. முக்கியமாக இஸ்லாமியர் ஆண்ட பகுதிகளில் மட்டுமே பிரியாணி அதிக புகழ் பெற்று இருப்பதன் மூலமே நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.உதாரணமாக லக்னோவில் Awath பகுதியை ஆண்ட சுல்தான்களின் காலத்தில் உருவான ஆவாதி தம் பிரியாணிதான் உண்மையான பெர்ஷியன் பிரியாணி என்று சொல்லப்படுகிறது.

கேரளத்தின் தலைசேரி பிரியாணி முற்றிலும் வித்தியாசமானது.இவர்கள் பாசுமதி அரிசியை பயன்படுத்துவதில்லை.மலபார்,மற்றும் மொகலாயர் பானி மசாலாக்களின் கலவை இந்த தலசேரி பிரியாணியின் தனித்துவம்.

briyani

அடுத்தது கொல்கத்தா பிரியாணி.19ம் நூற்றாண்டில் லக்னோவில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்து குடியேறிய வஜித் அலி ஷா என்கிற நவாப்,தனது சமையல்காரரையும் உடன் அழைத்து வந்துவிட்டார்.அவர் உருவாக்கியதுதான் கல்கத்தா பிரியாணி.இது லக்னோவி பிரியாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.உதாரணமாக உருளைக் கிழங்கை பிரியாணியில் சேர்த்தது கல்கத்தா பிரியாணிதான்.

ஆம்பூர் ,வானியம்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பிரியாணி ஆற்காடு நவாபுகள் காலத்திய மொகலாயர் பாணியை சேர்ந்தவை.அடுத்து தமிழகத்தில் பிரபலமான இன்னொரு பிரியாணி சங்கரன் கோவில் பிரியாணி.இது தூத்துக்குடி,நெல்லை,விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்கிற வகையைச் சேர்ந்த ஆட்டிறைச்சியை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

briyani

கர்நாடக கடற்க் கரையோர பகுதிககளில் தயாரிக்கபடும் பிரியாணி ‘பட்கல் பிரியாணி’ என்று அழைக்கப்படுகிறது.இதில் வெங்காயமும், உருளைக்கிழங்கும் அதிகம் சேர்க்கப்படுகிறது. 

அடுத்தது ‘பாம்பே பிரியாணி’.இது தம்போடாத பிரியாணிவகை.கோழி இறைச்சி தனியாகவும் சோற்றைத் தனியாகவும் சமைத்துவிட்டு வேறு ஒரு அண்டாவில் நெய் ஊற்றி சூடாக்கிவிட்டு அதில் முதலில் சோற்றை பரப்பி அதன் மீது கோழி இறைச்சி,மறுபடி சோறு,மறுபடி இறைச்சி என்று பல அடுக்குகளாக பரப்பித் தயாரிக்கப்படுகிறது.

briyani

பெர்ஷிய நாடோடி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஷாஜகான் மனைவி மும்தாஜால் மேம்படுத்தப்பட்டு,இன்று உலகம் முழுவதும் பரவிவிட்ட பிரியாணி அதன் மூலத்தயாரிப்பின் ருசியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகி இருக்கும். பிரியாணியின் சிறப்பே அதுதான்.ஹைதராபாத் நிஜாம் அரண்மனை சமையல் கூடத்தில் ஆடு,மான்,மாடு,முயல்,மீன் என்று ஐம்பது வகையான பிரியாணிகள் தயாரிக்கபடுகின்றன.

இந்தியாவிற்கு வெளியில் இருந்து மொகலாயர்களால் கொண்டு வரப்பட்டிருந்தாலும்,இந்தியாவிலிருந்து இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரொம்ப காலமாகவே ‘மெட்றாஸ் பிரியாணி’ என்கிற பெயரில் இன்றுவரை ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறது.வரலாறு முக்கியம் பாஸ்!

இதையும் படிங்க: பேச்சிலர் வாழ்க்கையில் இது மாதிரியான சட்னி உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும்!