நீங்க பண்றது ஏன் உங்களுக்கே புரிய மாட்டுங்கிறது?: கஸ்தூரியிடம் எகிறிய வனிதா

 

நீங்க பண்றது ஏன் உங்களுக்கே புரிய மாட்டுங்கிறது?: கஸ்தூரியிடம் எகிறிய வனிதா

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். 

இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க்காக ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் குழந்தைகள் போல் மாறியுள்ளனர். அவர்களுக்கு ஆசிரியர்களாகக் கஸ்தூரி மற்றும் சேரன் உள்ளனர். இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கஸ்தூரி, வனிதாவிடம் ‘ஒரு confident பெண் ஏன்? இப்படி ஒரு நினைப்பில் இருக்கீங்க? என்று கேட்க உடனே வனிதா, ‘திரும்பவும் நீங்க பண்றது ஏன்? உங்களுக்குப் புரிய மாட்டுங்கிறது எனக்கு தெரியல? என்று கஸ்தூரியிடம் எகிறியுள்ளது போல் உள்ளது. 

இது ஒரு பக்கம் இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் விலங்குகள் போல் வெளியே அமர்ந்து கத்தி ரகளை செய்வது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.